BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
'ஆபரேஷன் சிந்தூர்' ஆவணப்படம் குறித்து விவாதம் - பாகிஸ்தான் கூறியது என்ன?
இந்தியா - பாகிஸ்தான் இடையே 2025 மே மாதம் நடைபெற்ற ராணுவ மோதல் முடிந்து ஓராண்டு மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், சில நாட்கள் மட்டுமே நீடித்த இந்த மோதல் தொடர்பான இரு நாடுகளின் நிலைப்பாடுகள் இன்றளவும் வேறுபட்டே உள்ளன.
அமைச்சர்களின் பேச்சையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் அவைத்தலைவரின் அதிகாரங்கள் என்ன?
அவைக்குறிப்பிலிருந்து கருத்துகளை நீக்க சபாநாயகருக்கான அதிகாரம் என்னவென்று இந்தக் கட்டுரை விளக்குகிறது
'உயிரோடு இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ்': மதுரையில் மாமியார் - மருமகள் இடையே என்ன நடந்தது?
மதுரையைச் சேர்ந்த மூதாட்டி முத்துப்பிள்ளை கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் 'உயிரோடு இருக்கும் தன்னை இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டு, சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் வாரிசுச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார்.
'562 எலும்புக்கூடுகள்': செம்மணி மனிதப் புதைகுழி குறித்து மீண்டும் எழுந்த மக்கள் குரல் - பின்னணி என்ன?
இலங்கையில் மிகவும் பாரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை 562 என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பூனை உரிமையாளரின் 30வது பிறந்தநாளில் வீடு திரும்பியது எப்படி?
பிரிட்டனில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன 13 வயது பூனை ஒன்று தற்போது தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளது.
அம்மாவை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றிய நபரை தேடி நாடு கடந்து சென்ற மகன் - கண்டுபிடித்தது என்ன?
நைஜீரியாவின் ‘யாஹூ பாய்ஸ்’ என அழைக்கப்படும் இளைஞர்கள், தங்களது செல்போன்களையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி, சிலரிடம் இருந்து ஆயிரக்கணக்கான டாலர்களை பறிக்கின்றனர்.
ஜென் ஸி இளைஞர்கள் மதுவுக்கு பதில் இந்த மருந்துகளை நாடுவது ஏன்?
"ஓர் இரவு வெளியே செல்லும் முன் இந்த மருந்தை எடுத்தால்தான் நான் பாதுகாப்பாக இருப்பேன் என்று ஒருவர் தன்னை நம்ப வைக்கத் தொடங்கினால், அந்த நம்பிக்கை வாழ்க்கையின் பிற சூழல்களுக்கும் பரவிவிடும்,"
பெயரை குறிப்பிடுவது முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு பெரிய பிரச்னையா? விதிகள், மரபு பற்றிய ஒரு பார்வை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ( ஆகஸ்ட் 17) வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் திமுக முன்னாள் முதலமைச்சர் பெயரைப் குறிப்பிட்டு பேசியது சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. " உங்கள் தலைவரின் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் பேசியது தவறுதான் அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்றார் முதலமைச்சர் ஜோசப் விஜய். முதலமைச்சர் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு இந்த பெயர் பிரச்னை பெரும் பிரச்னையா?
'மகனை திட்டமிட்டு 'பாடி பில்டர்' ஆக்கி தொடர் கொலைகளில் ஈடுபட்ட பெண்' - காவல்துறையில் சிக்கியது எப்படி?
தனது மகனை ‘பாடி பில்டராக’ பயிற்றுவித்து, அவரது உதவியுடன் தொடர் கொலைகளில் ஒரு தாய் ஈடுபட்டுள்ளார். அந்த தாயையும், மகனையும் கைது செய்துள்ளதாக சித்திபேட்டை ஆணையரக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காணொளி, மூன்று சிறுமிகள் வெளியிட்ட வீடியோவால் சீரடைந்த கிராமச்சாலை , கால அளவு 4,55
மகாராஷ்டிராவை சேர்ந்த 3 மாணவிகள், சாலையில் இருந்த பள்ளங்கள் குறித்த காணொளியைப் பதிவு செய்தனர். அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
'அணுகுண்டு வீச்சை தடுக்கும் சக்தி அவர் ஒருவருக்கே இருந்தது' - கடைசி நிமிடங்களை பகிர்ந்த அமெரிக்க விஞ்ஞானி
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று, புளூட்டோனியம் அணுகுண்டு ஜப்பானின் நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்டது. இதன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு, பிபிசிக்கு அளித்த பேட்டியில், அந்த குண்டைத் தயாரித்து பொருத்த உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஒருவர், அந்த வெடிப்பை ஏன் தடுக்க முடியவில்லை என்பதையும், அதற்குப் பிறகான திட்டங்களையும் வெளிப்படுத்தினார்.
உங்கள் நாக்கு ஓய்வு நிலையில் மேலண்ணத்துடன் ஒட்டியிருக்கும் என்று தெரியுமா? 5 முக்கிய விஷயங்கள்
உங்கள் நாக்கு ஓய்வுநிலையில் இருக்கும் போது மேல் அன்னத்தில் இல்லாவிட்டால், அது நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத பிரச்னைகளை ஏற்படுத்தும் என தெரியுமா? உணவை மெல்லுதல், விழுங்குதல், மூசு விடுதல் போன்றவற்றில் நீங்கள் சந்திக்கும் ஏதேனும் பிரச்னைகளுக்கு அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் பல் மருத்துவர்கள்.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
கொசு மருந்து புகை உயிருக்கு ஆபத்தாகுமா? அன்னூர் சம்பவம் உணர்த்தும் பாடம் என்ன?
கோவை அன்னூரில் கொசு மருந்து புகையால் இருவர் உயிரிழந்ததாகப் பரவிய தகவலை அரசு அதிகாரிகளும் மருத்துவ ஆய்வுகளும் மறுத்துள்ளனர். உண்மையில் கொசு மருந்து உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தாக வாய்ப்புள்ளதா?
கமல் நடிப்பில் திரையுலகினரை கவர்ந்த சில முக்கிய கதாபாத்திரங்கள் - ஒரு தொகுப்பு
நடிகர் கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில கதாபாத்திரங்களுக்காக அவர் தனது தோற்றம், உடல்மொழி மற்றும் நடிப்பு முறையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
லார் கிப்பன்: வீடியோவில் விக்ரமுடன் இருந்த குரங்கு சட்ட விரோதமாக தமிழகம் கொண்டு வரப்பட்டதா? சர்ச்சை ஏன்?
அழிந்துவரும் விலங்கினப் பட்டியலில் உள்ள ‘லார் கிப்பன்’ வகை மனிதக் குரங்குடன் நடிகர் விக்ரம் விளையாடும் காணொளி இணையத்தில் பரவி சர்ச்சையானதைத் தொடர்ந்து, அந்தக் குரங்கு சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதா அல்லது உரிய ஆவணங்களுடன் வளர்க்கப்படுகிறதா என்பது குறித்துத் தமிழ்நாடு வனத்துறையும் மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்புப் பணியகமும் விசாரணை நடத்தி வருகின்றன. என்ன நடந்தது?
விஜய்க்கு போட்டியாக தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? நிபுணர்கள் பார்வை
நடிகர் தனுஷின் சமீபத்திய செயல்பாடுகள், பேச்சு மற்றும் அவரைப் பற்றி வெளிவந்த கருத்துகள் ஆகியவை அவரின் அரசியல் வருகைக்கான "அறிகுறியா" என சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. இதனிடையே, கோவை மாவட்டத்தில் தொகுதிவாரியாக தனுஷ் நற்பணி மன்ற உறுப்பினர்கள் சேர்க்கை துவங்கியிருப்பது இந்த விவாதத்தை வலுப்படுத்தியுள்ளது. தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா?
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவிலேயே எதிர்ப்பு கிளம்புவது ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு
தமிழ்நாடு - கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக நீடிக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் மேகேதாட்டு அணை திட்டம் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? கர்நாடக மக்கள், விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
கூவம் ஆறு சாக்கடையாக மாறத் தொடங்கியது எப்போது? 60 ஆண்டுகால திட்டங்கள் கைகொடுக்காதது ஏன்?
படகு சவாரி செல்வது, குழந்தைகள் குளித்து மகிழ்வது ஆகியவற்றைச் சாத்தியப்படுத்தும் அளவுக்கு கூவம், அடையாறு நதிகளை மீட்டெடுக்க திட்டமிட்டு இருப்பதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையில் கூறியுள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியம்? சவால்கள் என்ன?
இந்தியாவுடன் மோதல் வெடித்தால் பாகிஸ்தானுக்கு சௌதி, துருக்கி உதவுமா? மெக்கா ஒப்பந்தம் பற்றிய பார்வை
சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வெள்ளிக்கிழமை சௌதி அரேபியாவின் மெக்காவில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. அதன்படி, இந்தியாவுடன் மோதல் ஏற்படும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு சௌதி, துருக்கி உதவுமா? மெக்கா ஒப்பந்தம் ஒரு பார்வை
சென்னையில் அதிகரிக்கும் 'கோ-லிவிங்' விடுதிகள்: எதிர்ப்புகள் எழுவது ஏன்?
சென்னை போன்ற பெருநகரங்களில் சமீப காலமாக ஆண், பெண் இருபாலரும் தங்கக்கூடிய கோ-லிவிங் விடுதிகள், தங்குமிடங்கள் பெருகி வருகின்றன. இதுகுறித்த இளைஞர்களின் பார்வை என்ன? மறுபுறம் எதிர்ப்புகள் எழுவது ஏன்?
குருவாயூர் கோயில், சிருங்கேரி மடத்திற்கு வாரி வழங்கிய திப்பு சுல்தான் மீது 'மத வெறியர்' முத்திரை விழுந்த கதை
திப்பு ஒரு கொடுங்கோலன், மத வெறியன் என 1784-வரை ஆங்கிலேயர்களால் சித்தரிக்கப்படவில்லை. இந்தியாவில் பிரெஞ்சுக் காரர்களின் ஆதிக்கத்தை முற்றிலுமாக முறியடித்துவிட்டதாக எண்ணியிருந்த ஆங்கிலேயர்கள் திப்புவின் பிரெஞ்சுக்காரர்களுடனான தொடர்பால் அச்சுற்றனர். எனவே ஆங்கிலேயர்களுக்கு திப்புவே பிரதான எதிரியாகத் தெரிந்தார்.
எவரெஸ்டில் 30 ஆண்டாக உள்ள இந்தியர் உடலை கீழே கொண்டு வருவது ஏன் சவாலானது? குடும்பம் கூறுவது என்ன?
‘கிரீன் பூட்ஸ்’ என அழைக்கப்படும் ஒரு சடலம், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள பனிப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகக் கிடக்கிறது. இப்போது, அவரது உடலை மீட்பதற்கான குழுவை இந்தியா தேடி வருகிறது.
'இன்னொரு கண்ணையும் பறிப்பதா?': எரிபொருள் குழாய் பதிக்க திருப்பூர் விவசாயிகள் எதிர்ப்பு - பிபிசி கள ஆய்வு
கோவை–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலம்பட்டி டோல்கேட் அருகே கடந்த ஜூலை 31-ஆம் தேதி விவசாயிகள் பலரும் நடத்திய போராட்டம் குறித்த காணொளிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. எரிபொருள் குழாய் பதிக்கும் பணி, பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள இந்த விவசாயிகள் மட்டும் போராடுவதன் பின்னணி என்ன?
எட்டப்பன் உண்மையில் கட்டபொம்மனை காட்டிக்கொடுத்தாரா? முரண்பாடு குறித்த வரலாற்று பகுப்பாய்வு
சில நாட்களுக்கு முன்னர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 'எட்டப்பன்' குறித்து பேசிய கருத்துகளும், அதற்கு எட்டயபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சந்திர சைதன்யா அளித்த பதிலும், 'எட்டப்பன் வரலாறு' குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































